பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டு மீட்கபட்டது
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு சில ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தற்போது மீடகப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு சில ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த டுவிட்டர் கணக்கு ஹேக்கர்கள் சிலரால் முடக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில் இடப்பட்ட டுவீட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிற்கான பிரதமரின் தேசிய நிவாரண சேகரிப்புக்கு அனைவரும் நிதியுதவி செலுத்துங்கள். கிரிப்டோ கரன்சி முறை பரவலாக தொடங்கியிருக்கிறது. எனவே பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று கூறி குறிப்பிட்ட விஷயமும் பதிவாகியிருந்தது. டுவிட்டர் நிறுவனம் உடனே தொடர்பான டுவிட்டுகளை நீக்கியது.
டுவிட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான (https://www.narendramodi.in/) டுவிட்டர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் இந்த நடவடிக்கை பற்றி அறிந்திருப்பதாகவும், சமரசம் செய்யப்பட்ட கணக்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். "நாங்கள் நிலைமையை தீவிரமாக விசாரித்து வருகிறோம். இந்த நேரத்தில், கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது என கூறினார்.
முன்னதாக ஜூலை மாதம், முக்கிய நபர்களின் பல கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பில்லியனர் வணிக அதிபர் எலோன் மஸ்க் உள்ளிட்ட வலைத்தளத்தின் சில சுயவிவரங்களை கடத்த ஹேக்கர்கள் ட்விட்டரின் உள் அமைப்புகளை அணுகினர், மேலும் அவற்றை டிஜிட்டல் நாணயத்தை கோர பயன்படுத்தினர். உபெர் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் கணக்குகளும் பெரிய மீறலில் சமரசம் செய்யப்பட்டன.
பிரதமர் அலுவலகத்தின்டுவிட்டர் கணக்கிற்கு (PMO India) ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கோடீஸ்வரர் எலோன் மஸ்க், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்
உள்பட பல முக்கிய நபர்களின் பல டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related Tags :
Next Story