இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு: பிரதமர் மோடி உரை
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்கா- இந்தியா உத்திகள் வகுத்தல் பங்கேற்றல் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் மிக விரைவாக மருத்துவ வசதிகள் உருவாக்கியதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வருவோரின் விகிதமும் உயர்ந்து வருகிறது.
நமது தற்போதைய சூழல் புதிய மனநிலையையும் வளர்ச்சிக்கான சூழலையும் எதிர்நோக்குகிறது. நமது பொருளாதார அமைப்பு, சுகாதார அமைப்புஆகியவற்றை கொரோனா சோதித்து பார்க்கிறது.
80 -கோடி மக்களுக்கு இலவசமாக தானியம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பலவிவகாரங்களை பாதித்துள்ளது. ஆனால் 130 கோடி மக்களின் நம்பிக்கையை பாதிக்க முடியவில்லை. உலகிலேயே மிகப்பெரிய வீட்டு வசதி திட்டம், டிஜிட்டல் மருத்துவ வசதிகளை இந்தியா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இந்தியா நாளை வளம் மிக்கதாக மாறும். தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story