மைசூரு தசரா விழா கொண்டாட எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு கர்நாடக அரசு உத்தரவு


மைசூரு தசரா விழா கொண்டாட எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2020 6:27 AM IST (Updated: 4 Sept 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தசரா விழா கொண்டாட எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி மைசூருவில் உலக புகழ் பெற்ற தசரா விழா கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முத்தாய்ப்பாக விஜயதசமி பண்டிகை அன்று ஜம்பு சவாரி நடைபெறும். சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் யானைகள் புடைசூழ நடைபெறும் இந்த ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாதம் அதாவது அக்டோபரில் இந்த தசரா விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுவதையொட்டி மக்கள் ஒரு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தசரா விழாவை எளிமையாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தசரா விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், லட்சுமண் சவதி உள்ளிட்ட 54 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Next Story