கேரளாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க முடிவு


கேரளாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க முடிவு
x
தினத்தந்தி 4 Sept 2020 8:06 AM IST (Updated: 4 Sept 2020 8:06 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

கோழிக்கோடு,

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன், கல்வித்துறை இயக்குனர் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறந்தால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது.மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனைத்து அரசு பள்ளிகளையும் தயார் படுத்தும் பணி நடைபெறும். கொரோனா பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story