பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது


பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது
x
தினத்தந்தி 4 Sept 2020 11:41 AM IST (Updated: 4 Sept 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதியை போலீசார் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக 3 பேரும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்தும் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதாவது பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று காலையில் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே நடிகை ராகிணி திவேதி சார்பில், அவரது வக்கீல் போலீசாரை சந்தித்து பேசி விசாரணைக்கு அவர் ஆஜராக முடியாத காரணம் குறித்து விளக்கம் அளித்தார். அதாவது சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் வக்கீல் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப்பட நடிகை ராகினி திவேதியிடம் விசாரணை நடைபெறுகிறது. வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ராகினியை கைது செய்துள்ளனர்.

Next Story