நாட்டில் வெண்டிலேட்டரில் உள்ள கொரோனா நோயாளிகள் 0.5%க்கும் குறைவு
நாட்டில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் விகிதம் 0.5%க்கும் குறைவாக உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38,53,406ல் இருந்து 39,36,747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 8.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் ஒரே நாளில் 66,659 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.70 லட்சத்தில் இருந்து 30.37 லட்சமாக உயர்ந்து உள்ளது.
அதிக அளவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருவதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சம் கடந்து உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுவரை நாட்டில் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் விகிதம் 0.5%க்கும் குறைவாக உள்ளது. ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் 2% பேரும் மற்றும் பிராணவாயு சிகிச்சையானது 3.5%க்கும் குறைவான நபர்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story