இந்தியா-சீனா மோதல்: லடாக் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்


இந்தியா-சீனா மோதல்: லடாக் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு  - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 5 Sept 2020 7:53 AM IST (Updated: 5 Sept 2020 7:53 AM IST)
t-max-icont-min-icon

லடாக் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடினமான சூழல் நிலவுவதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

அவர் எழுதிய ‘தி இந்தியா வே’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்தியாவும், சீனாவும் தங்களுக்காக மட்டுமின்றி, உலக நலனுக்காகவும் நிச்சயம் ஒரு சுமுக தீர்வை எட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, லடாக் எல்லை முழுவதும் எங்களிடம் உள்ள சூழல் உங்களுக்கும் இருப்பதை நான் உணர்கிறேன். ஏனெனில் நீண்ட கால பார்வை நமக்கு உள்ளது. இந்த பிரச்சினையில் நமது நிலை தெளிவாக உள்ளது. சீனாவுடன் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகள் இருக்கின்றன. அவற்றை இரு நாடுகளும் கவனமுடன் அனுசரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எல்லை பிரச்சினை இருநாட்டு உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதை பிரிக்க முடியாது என்பதே நிதர்சனம் எனவும் கூறிய ஜெய்சங்கர், இந்த பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில்தான் உள்ளது என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

Next Story