இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்


இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Sept 2020 8:23 AM IST (Updated: 5 Sept 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்தொடங்கியது முதல் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லா திண்டாட்டமும் நிலவி வருகிறது.

இதற்கு இடையே ஆகஸ்டு மாதத்தில் கிராமப்புற வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

இதை சுட்டிக்காட்டி மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, இளைஞர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

டுவிட்டரில் அவர் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், வேலை வாய்ப்பு, மீண்டும் பணியமர்த்தல், வேலைவாய்ப்பு தேர்வு முடிவுகளை வெளியிடல் என இந்த நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குங்கள் என கூறி உள்ளார்.

Next Story