ஆசிரியர் தினம்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து


ஆசிரியர் தினம்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Sept 2020 10:59 AM IST (Updated: 5 Sept 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ குழந்தைகளின் அறிவை மேம்படுத்தவும் நாட்டை கட்டமைக்கவும்  கடினமாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.  

ஆசிரியர் தினமான இன்று,  அவர்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்போம்.  டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று (செப்.5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

Next Story