நாடு முழுவதும் எப்போது திரையரங்குகளை திறப்பு குறித்து வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஆலோசனை
நாடு முழுவதும் எப்போது திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து 8-ம் தேதி மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
புதுடெல்லி,
கொரானோ ஊரடங்கு காரணமாக 160 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. மற்ற தொழில்கள் ஓரளவிற்கு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கும் நிலையில், தியேட்டர்கள் மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு முடிந்த பல படங்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன.
இந்நிலையில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் 8ஆம் தேதி கலந்தாலோசனை நடத்துகிறது.
ஆண்டுக்கு சில படங்களை மட்டும் எடுக்கும் குஜராத்தில் இருந்து இரு அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள், சங்கத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 800 படங்கள் எடுக்கும் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தியேட்டார் திறப்பு குறித்த ஆலோசனையில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, தியேட்டர் உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story