டெல்லியில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்? அரவிந்த்கெஜ்ரிவால் விளக்கம்
டெல்லியில் வரும் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி,
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. வரும் 7 ஆ,ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவைக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் சோதனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டு வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக கூறுகையில், “ ஒவ்வொரு நாளும் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால் தொற்று பாதிப்பை அதிகம் கண்டறிய முடிகிறது.
இதன் மூலம் தொடர்புகளை கண்டறிய முடியும். எவ்வளவு அதிகமாக பரிசோதனை செய்யப்படுகிறதோ அந்த அளவு அதிகமாக தொற்று பாதிப்பை கண்டறிய முடியும். இந்த வழியில் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story