புதிய கல்வி கொள்கையால் படித்தவற்றை தேர்வறையில் வாந்தி எடுக்கும் சூழல் இருக்காது; ஜே.பி. நட்டா பேச்சு
புதிய கல்வி கொள்கையால் படித்தவற்றை தேர்வறையில் வாந்தி எடுக்கும் சூழல் இருக்காது என்று ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜூலை 29ந்தேதி நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் மனித மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தை ‘கல்வி அமைச்சகம்‘ என பெயர் மாற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த புதிய கல்வி கொள்கையில் பன்மொழி கல்வியை ஊக்குவித்தல், உலகில் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப டிஜிட்டல் கல்வி முறை, கற்பித்தலில் புதிய முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்றும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறும்பொழுது, நம்முடைய காலங்களில் பாடங்களை நாம் மனப்பாடம் செய்வது வழக்கம். அதன்பின்னர் நமக்கு தெரிந்தவற்றை தேர்வறையில் வாந்தி (எழுதுதல்) எடுப்போம்.
ஆனால், புதிய கல்வி கொள்கையின் கீழ், மனப்பாடம் செய்வதற்கான தேவையே இல்லை. அதற்கு பதிலாக கருத்துரு சார்ந்த அறிவு மற்றும் பகுப்பாய்வு செய்தல் போன்ற விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story