அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதி பாபர் மசூதியைப் போலவே இருக்கும் - இந்தோ-இஸ்லாமிய அறக்கட்டளை


அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதி பாபர் மசூதியைப் போலவே இருக்கும் - இந்தோ-இஸ்லாமிய அறக்கட்டளை
x
தினத்தந்தி 5 Sept 2020 4:34 PM IST (Updated: 5 Sept 2020 4:34 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதி, பாபர் மசூதியைப் போலவே இருக்கும் அதில் மருத்துவமனை, நூலகம் அமையும் என இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

லக்னோ

நீண்ட சட்ட மோதலுக்குப் பிறகு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி புனித நகரத்தில் ஒரு "முக்கிய" இடத்தில் ஒரு புதிய மசூதியைக் கட்ட  சன்னி வக்ஃப் வாரியத்திற்கு மாற்று இடத்தில்  ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தியது.  

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் மசூதி கட்டுவதற்காக அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியது.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (ஐ.ஐ.சி.எஃப்) என்ற அறக்கட்டளையை உருவாக்கியுள்ளது.

இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் (ஐ.ஐ.சி.எஃப்) செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஹுசைன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் உள்ள ஐந்து ஏக்கர் வளாகத்தில் ஒரு மருத்துவமனை, ஒரு நூலகம் மற்றும் ஒரு அருங்காட்சியகம் ஆகியவை அமைய உள்ளன.  மசூதியின் வளாகத்தில் ஒரு மருத்துவமனை, இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தில் ஒரு அருங்காட்சியகம் போன்ற வசதிகளும் இருக்கும். மசூதி 15,000 சதுர அடியில் இருக்கும், மீதமுள்ள நிலத்தில் இந்த வசதிகள் இருக்கும்.புதிதாக கட்டப்படும்  மசூதி பாபர் மசூதியைப் போலவே இருக்கும்.

ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல உணவு விமர்சகருமான புஷ்பேஷ் பந்த் அருங்காட்சியகத்தின் ஆலோசகர் கண்காணிப்பாளராக இருப்பார்."நேற்று, புஷ்பேஷ் பந்த் அருங்காட்சியகத்தை நிர்வகிக்க தனது ஒப்புதலை
அளித்தார்.

இந்த திட்டத்தின் ஆலோசகர் கட்டிடக் கலைஞராக ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பேராசிரியர் எஸ் எம் அக்தர் இருப்பார் என கூறினார்.


Next Story