காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி
காஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ஷாபூர், கிர்னி மற்றும் தேக்வார் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறியரக பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானில் இந்த அதிரடி அத்துமீறிய தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, பொருட்சேதம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதியில் இருந்தே பாகிஸ்தானின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 2 ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

Related Tags :
Next Story