‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக வழிதப்பிய சீனர்களை மீட்டு உதவிய இந்திய ராணுவம்!
பாரதியின் ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக லடாக் பகுதியில் வழிதப்பிய சீனர்களை இந்திய ராணுவம் மீட்டு உதவியது.
புதுடெல்லி,
இந்திய, சீன எல்லையின் கிழக்கு லடாக் பகுதியில் சீன துருப்புகள் தொடர்ந்து அத்துமீறி, இந்திய படைவீரர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தருணத்தில், கடந்த 3-ந்தேதியன்று வடக்கு சிக்கிமின் பீட பூமி பகுதிகளில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 2 ஆண்கள், ஒரு பெண் என சீனர்கள் 3 பேர் வழி தப்பி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பூஜ்ஜியம் டிகிரி வெப்ப நிலைக்கு கீழே உள்ள பகுதிக்கு செல்கிறபோது, அது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் உணர்ந்து அவர்களை மீட்டனர்.
அத்துடன் அவர்களுக்கு ஆக்சிஜன், உணவு, இதமான வெப்பம் தரும் ஆடைகள் மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கினர். அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சரியான வழிகளை காட்டினர். அதைத்தொடர்ந்து அவர்கள் சரியான பாதையில் திரும்பிச்சென்றனர். இதற்காக இந்தியாவுக்கும், இந்திய ராணுவத்துக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
பாரதியின் ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக இந்திய ராணுவ வீரர்கள், சீனர்களுக்கு உதவியது நெகிழ வைப்பதாக அமைந்துள்ளது.

Related Tags :
Next Story