புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
பெங்களூருவில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாடம் கற்பித்து வருகிறார்.
பெங்களூரு,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைன் கல்விக்கு வழியில்லாத குழந்தைகள் கல்வி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதேபோல, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாடம் கற்பித்து வருகிறார்.
அதாவது, பெங்களூரு அன்னப்பூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாந்தப்பா. இவர், போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடம் கற்று வருகிறார்கள். அவர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தடியில் வைத்து தினமும் ஒரு மணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.
இதுபற்றி அறிந்ததும் மந்திரி சுரேஷ்குமார், போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தப்பாவின் செயலுக்கு மிகவும் பாராட்டு தெரிவித்தார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Tags :
Next Story