கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு


கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு
x
தினத்தந்தி 6 Sept 2020 10:44 AM IST (Updated: 6 Sept 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு  விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் தேசிய பாதுகாப்பு படையினரின் கார்கள் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென பசுமாடு ஒன்று காருக்கு குறுக்கே வந்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சென்ற கார் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பின்னால் வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதாகவும் இதில் நான்காவதாக வந்த சந்திரபாபு நாயுடு காரும் மோதியதாக தெரிகிறது.

இதனை அடுத்து சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் இருப்பினும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்துமின்றி அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story