பாராளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில், செப். 8-ல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்
காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், வரும் 8ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
பாராளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் விடுமுறை இல்லாமல் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலம் என்பதால் எம்.பி.க்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாராளுமன்ற இரு அவைகளையும் தலா 4 மணி நேரம் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன.
இரு அவைகளும் காலை, மாலை தனித்தனியாக நடத்தப்படுகிறது. மேல்சபை காலையிலும், மக்களவை மாலை நேரத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், எம்.பிக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதில், பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
Related Tags :
Next Story