திரையுலகில் போதைப்பொருள் பழக்கம்: கன்னட சின்னத்திரை நடிகை கைதில் புதிய தகவல்


திரையுலகில் போதைப்பொருள் பழக்கம்: கன்னட சின்னத்திரை நடிகை கைதில் புதிய தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2020 6:25 AM IST (Updated: 7 Sept 2020 6:25 AM IST)
t-max-icont-min-icon

சின்னத்திரை நடிகை அனிகாவின் கணவரான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

கொச்சி,

பெங்களூருவில் சமீபத்தில் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரம் தொடர்பாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாகவும், விருந்து நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் மூலம் போதைப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் கன்னடத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதனிடையே இந்த போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சின்னத்திரை நடிகை அனிகாவின் கணவரான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரள மாநிலம் கொச்சியில் இதேபோல் போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் கோவாவில் பதுங்கி இருந்த ஒகாவா காலின்ஸ் என்ற நைஜீரியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கன்னட திரையுலக போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ள சின்னத்திரை நடிகை அனிகாவின் கணவரும் ஒகாவா காலின்சும் நெருங்கிய நண்பர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஒகாவா காலின்சுடன் பிராங்கோ என்கிற நபரும் நைஜீரியாவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அந்தோ பிரங்கோதான் அனிகாவின் கணவராக இருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Next Story