வெள்ள சேதங்களை மதிப்பிட மத்திய குழு இன்று கர்நாடகம் வருகை
வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று கர்நாடகம் வருகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குறிப்பாக குடகு மற்றும் வட கர்நாடகத்தின் பாகல்கோட்டை, விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. முதல் கட்டமாக இதை மதிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, ரூ.4,800 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளது. மேலும் மத்திய குழு ஒன்றை அனுப்பி சேதங்களை மதிப்பிடுமாறு மத்திய அரசுக்கு கர்நாடகம் கோரிக்கை விடுத்தது.
அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதாப் தலைமையிலான மத்திய குழு இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறது. அந்த குழுவினர் பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அதைத்தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட செல்கிறார்கள். அந்த குழுவினருக்கு மழை பாதிப்புகளை எடியூரப்பா எடுத்துக் கூற உள்ளார்.
3 நாட்கள் ஆய்வுக்கு பிறகு அந்த குழு 9-ந் தேதி மாலையில் டெல்லி புறப்பட்டு செல்கிறது. அதற்கு முன்பு வருவாய்த்துறை மந்திரி மற்றும் அதிகாரிகள் அந்த குழுவை சந்தித்து மழை சேதங்கள் குறித்து ஆதாரங்களுடன் மனு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆய்வின்போது மத்திய குழுவினரை விவசாயிகள் சங்கத்தினர் நேரில் சந்திதது மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story