பாராளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை


பாராளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 7 Sep 2020 8:28 AM GMT (Updated: 7 Sep 2020 8:28 AM GMT)

பாராளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி துவங்குகிறது.  18 நாட்கள் தொடர்ந்து அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி வரை எந்த விடுமுறையும் இன்றி தினமும் நடைபெறுகிறது. பாராளுமன்ற அவை நடவடிக்கை பணிகளில் ஈடுபடும் சுமார் 1000 அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கான நடைமுறை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும் அதிகாரிகள் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் நுழைவு வாயில்களை பயன்படுத்துவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் போது புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. ரகசியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

Next Story