ஜமைக்கா நாட்டு இந்திய தூதராக ஆர். மசாகுய் நியமனம்
ஜமைக்கா நாட்டுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவு பணியை சேர்ந்த மசாகுய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
ஜிம்பாப்வே குடியரசின் இந்திய தூதராக இதுவரை பணியாற்றி வந்த இந்திய வெளியுறவு பணியை சேர்ந்த ஆர். மசாகுய் ஜமைக்கா நாட்டுக்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அவரது நியமனத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஜமைக்கா தூதராக பொறுப்பு வகிக்க உள்ளார்.
ஜிம்பாப்வே குடியரசின் இந்திய தூதராக விஜய் கந்துஜா முன்பே நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டார். அவர் வெளிவிவகார அமைச்சகத்தில் இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
Related Tags :
Next Story