"வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகம் நிறுத்தம் இல்லை" - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகம் நிறுத்தம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வங்கிகளில் ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்தவித உத்தரவும் பிறபிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இணையதள பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் நிதி அமைச்சரகத்திலிருந்து வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறோம். எனவே அவ்வாறு பிறப்பிக்கும் எண்ணமோ/நோக்கமோ இல்லை. எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தெரிவிக்கவும். தகவல் தெரிவிக்கப்பட்டஉடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிடுள்ளார்.
Related Tags :
Next Story