திபெத் வீரரின் இறுதிச்சடங்கில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு


திபெத் வீரரின் இறுதிச்சடங்கில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Sept 2020 6:59 AM IST (Updated: 8 Sept 2020 6:59 AM IST)
t-max-icont-min-icon

திபெத் வீரரின் இறுதிச்சடங்கில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

லடாக்,

லடாக்கின் தெற்கு பியாங்காக் பகுதியில் கடந்த வாரம், எஸ்.எஸ்.எப்., எனப்படும் சிறப்பு எல்லைப் படைப் பிரிவை சேர்ந்த நைமா டென்சின் என்ற திபெத்திய வீரர், கண்ணி வெடி வெடித்ததில் உயிரிழந்தார். நைமா டென்சினின் இறுதிச் சடங்கு, நேற்று லடாக்கின் லே பகுதியில் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ அதிகாரிகள், திபெத்திய சமூகத்தினர் என பலரும் பங்கேற்றனர். இதில் பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் கலந்துகொண்டு, வீரரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த, 1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய-சீன போருக்குப் பிறகு, இந்திய ராணுவத்தில் சிறப்பு எல்லைப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த படைப்பிரிவில் 3,500க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் திபெத்திய மக்கள் ஆவர். திபெத்தை விட்டு, தலாய் லாமா வெளியேறிய பின், இந்தியாவை தங்கள் நாடாக ஏற்றுக்கொண்டு வந்த திபெத்திய அகதிகளுக்கு இந்தப் படைப்பிரிவில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சீனா அத்துமீறலால் கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், திபெத் சிறப்பு பாதுகாப்புப் படை வீரா் ஒருவரின் இறுதிச் சடங்கில் பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராம் மாதவ் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதை சீனாவுக்கு உணா்த்தும் வகையிலேயே, இறுதிச் சடங்கில் பாஜக மூத்த தலைவா் பங்கேற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

Next Story