அந்தமான், லடாக் பகுதிகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்


அந்தமான், லடாக் பகுதிகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 8 Sept 2020 8:46 AM IST (Updated: 8 Sept 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

அந்தமான், லடாக் பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதிக்கு 20 கி.மீ. தென்கிழக்கில் இன்றூ அதிகாலை 3 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியிருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை 5 மணியளவில் லடாக், கார்கில் வடமேற்கு திசையில் சுமார் ரிக்டர் 4.4 அளவு கொண்ட நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த சனிக்கிழமை, மகாராஷ்டிராவின் மும்பைக்கு வடக்கே 98 கி.மீ தூரத்தில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story