இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை தாண்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் செப்டம்பர் 7-ம் தேதி நிலவரப்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக 5.06 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரிசோதனை குறித்து செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், செப்டம்பர் 7-ம் தேதி வரை நாட்டில் ஒட்டுமொத்தமாக 5,06,50,128 -கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,98,621 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story