இந்தியா வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை நிறுத்தம்; ரஷ்ய துணை தூதர் பேட்டி


இந்தியா வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை நிறுத்தம்; ரஷ்ய துணை தூதர் பேட்டி
x
தினத்தந்தி 8 Sept 2020 9:03 PM IST (Updated: 8 Sept 2020 9:03 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது என ரஷ்ய துணை தூதர் டெல்லியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய நாட்டுக்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் பபுஷ்கின் டெல்லியில் இன்று அளித்த பேட்டியில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சீன ராணுவ மந்திரியை சந்தித்து பேசினார் என்ற விவரம் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

இதேபோன்று இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், சீன வெளிவிவகார மந்திரியை சந்தித்து பேசுவார் என்பதும் வரவேற்க கூடியது.  இந்த சந்திப்புகளால் நல்ல முடிவுகள் எட்டப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியே.

பாகிஸ்தான் நாட்டுக்கு ஆயுத சப்ளையை நிறுத்துவது என்ற நிலைப்பாட்டில், இந்திய தரப்பில் இருந்து அவர்கள் எங்களிடம் கேட்டு கொண்டதற்கு ஏற்பவே முடிவானது.

இந்தியா மற்றும் சீனா இடையேயான விவகாரத்தில் அவர்கள் இருவரும் கேட்டு கொண்டால் ஒழிய, அதில் நாங்கள் தலையிடுவது இல்லை என்பது ரஷ்யாவின் வெளியுறவு கொள்கை மற்றும் இந்தியா போன்ற ஒத்த எண்ணமுடைய நாடுகளின் கொள்கை என்பது நன்றாக தெரிந்த ஒன்று.  இதனை அவர்கள் ஏற்று கொள்கிறார்களா என்பது பற்றி இரு நாடுகளுமே முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story