செப்.21ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு


செப்.21ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு
x
தினத்தந்தி 8 Sept 2020 9:10 PM IST (Updated: 8 Sept 2020 9:10 PM IST)
t-max-icont-min-icon

செப்.21ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த 6 மாதங்களாக கல்லூரி, பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செப்.21ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில்

* பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயம்.

*விருப்பமுடைய மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே பள்ளிக்கு வர வேண்டும்.

* சுய விருப்பத்தின்படி மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

Next Story