தெற்கு திபெத்’ என்று கூறிய சீனாவுக்கு அருணாசலபிரதேச மாணவர் சங்கம் எதிர்ப்பு
நாங்கள் இந்திய குடிமக்கள் என்பதில் பெருமைப்படுகிறோம் என அருணாசலபிரதேச மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இடாநகர், -
அருணாசலபிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. இதற்கு விளக்கம் தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், அருணாசலபிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று குறிப்பிட்டது. அதற்கு அனைத்து அருணாசலபிரதேச மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
எங்கள் மாநிலத்தை தெற்கு திபெத் என்று கூறியதை அருணாசலபிரதேச மக்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இதுபோன்ற சந்தேகத்துக்கிடமான அறிவிப்புகளை தவிர்க்குமாறு சீனாவையும், சீன கம்யூனிஸ்டு கட்சியையும் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் இந்திய குடிமக்கள் என்பதில் பெருமைப்படுகிறோம். எங்களுக்கு வெளிநாட்டின் அங்கீகாரம் தேவையில்லை. திசைதிருப்புவதை விட்டுவிட்டு, 5 இளைஞர்களையும் உடனே விடுவிக்குமாறு சீன ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story