பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா இறப்புகளை குறைக்காது: ஐசிஎம்ஆர்


பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா  இறப்புகளை குறைக்காது: ஐசிஎம்ஆர்
x
தினத்தந்தி 9 Sept 2020 11:01 AM IST (Updated: 9 Sept 2020 11:01 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க பிளாஸ்மா தெரபி உதவாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் காரணமாக இறப்பைக் குறைக்க பிளாஸ்மா (சிபி) சிகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  ஒரு ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை ஆராய்ந்து அதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை பிளாஸ்மா சிகிச்சை குறைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.


Next Story