விமானப்படையில் முறைப்படி இணைந்த 5 ரபேல் போர் விமானங்கள்: - மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் மந்திரி பார்லி பங்கேற்பு
பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டது.
கவுகாத்தி,
அரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் 5 விமானங்களும் இணைக்கப்பட்டன.
பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி ப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம், விண்ணில் பறக்க விடப்பட்டு சாகசம் செய்து காட்டப்பட்டது.
இதனை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்ஸ் மந்திரி ப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Tags :
Next Story