சாப்பிடும் போது நீங்கள் மொபைல் பயன்படுத்துபவரா..? அப்போ இது உங்களுக்கு பயன்படும்
சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்தும் சாப்பாட்டு தட்டு சமூக வலைதலங்களில் வைரலாகி உள்ளது.
மும்பை
மொபைல் போன்கள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டன. சாப்பிடும் போதும் சரி கழிவறையிலும் சரி நாம் மொபைல் போன் இல்லாமல் இருப்பது இல்லை..
சமூக ஊடகங்களில் நாள் முழுவதும் உருட்டுவதற்கு நாங்கள் பழகிவிட்டோம். ஆனால் நாம் உணவு உண்ணும் போது உண்ணும்போது மொபைல் போனை பயன்படுத்தும் போது சில நேரங்களில் சாம்பாரிலோ, அல்லது ரசத்திலோவிழுந்து விட்டால் என்ன செய்வது? இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக ஒரு 'நவீன உணவு தட்டை' ஓட்டல் ஒன்றில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
சாப்பாட்டு நிரம்பிய தட்டு வடநாட்டில் தாலி என அழைப்பார்கள் என்பது பருப்பு, ரோட்டி, அரிசி, தயிர், சாலட் மற்றும் இனிப்பு போன்ற உணவைக் கொண்ட ஒரு தட்டுத் தொகுப்பாகும்.
ஆனால் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'நவீன தாலி' புகைப்படம் ஒன்றில் ஒரு நபர் தனது மொபைல் போனை வைத்து கொள்ள தனி பகுதி உள்ளது. அதனை ரசித்தவாரே உணவை ருசிக்கலாம். நீங்கள் படத்தை உற்று நோக்கினால், தொலைபேசி தாலியில் வைக்கப்பட்டுள்ளதைக் காண்பீர்கள்
தட்டில் மொபைல் வைப்பதற்கு தனி இடம் இருக்கும் புகைப்பட டூவிட்ட ஹர்பஜன் சிங் பகிர்ந்து உள்ளார்.
"தொலைபேசிக்கான இடத்துடன் நவீன தாலி. என்ற தலைப்பில் டுவிட்டரில் இது வைரலாகி உள்ளது.
14,800 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இது ஒரு உண்மையான பிரச்சினைக்கு சிறந்த புதுமையான தீர்வு என்று கூறி உள்ளனர்.
ஒருவர் இது கடந்த 10 ஆண்டுகளில் இருந்து எங்கள் ஹாஸ்டலில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழைய தாலி" என்று கருத்து தெரிவித்தார். இன்னொருவர் குறிப்பிட்டார், "இது வேடிக்கையானது மற்றும் வருத்தமளிக்கிறது ... உங்கள் உணவை மதித்து அர்ப்பணிப்புடன் இருங்கள் என ஒருவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது பதிவிட்டுள்ள டுவீட்டை அஜித் ரசிகர்கள் வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். மார்டன் தட்டு என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், சாப்பிடும் தட்டில் மொபைல் வைப்பதற்கு என்று தனி இடம் உள்ளது.
தட்டில் மொபைல பார்த்தீர்கள், ஆனால் மொபைல்ல யாருன்னு பார்த்தீங்களா என்று அந்த புகைப்படத்தை ஜூம் செய்து அஜித் ரசிகர்கள் போட்டுள்ளனர். அந்த மொபைலில் அஜித்தின் விஸ்வாச பட காட்சி உள்ளது. இதையடுத்து இதை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.
Modern thali with space for phone 📱 orders urs 😂😂😂😂 pic.twitter.com/jRfW7REH9M
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 10, 2020
Related Tags :
Next Story