கொரோனா பரிசோதனை செய்துகொண்ட வெங்கையா நாயுடு

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 11 Sept 2020 6:47 PM IST (Updated: 11 Sept 2020 6:47 PM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கய்ய நாயுடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கொரோனா பரிசோதனையை செய்துகொண்டார்.

புதுடெல்லி,

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,
துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கய்ய நாயுடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கொரோனா பரிசோதனையை செய்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14, திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை வெங்கய்ய நாயுடு சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தார்.

சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டுள்ள இருக்கை ஏற்பாடுகளோடு, செயலகத்தின் பணியாளர்களைக் கொண்டு வெங்கையா நாயுடு தலைமையில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

Next Story