மூத்த தலைவர்கள் பதவி பறிப்பு, புதியவர்கள் நியமனம்; காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்


மூத்த தலைவர்கள் பதவி பறிப்பு, புதியவர்கள் நியமனம்; காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 12 Sept 2020 4:21 AM IST (Updated: 12 Sept 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சியை அமைப்பு ரீதியில் அதிரடியாக மாற்றி அமைத்துள்ளார். மூத்த தலைவர்களை நீக்கி உள்ளார். புதியவர்களை நியமனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

கட்சியின் பொதுச்செயலாளர்களாக பதவி வகித்து வந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜூன கார்கே, லுய்ஜின்கோ பெலெய்ரோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மாநில பொறுப்பாளர்களாக செயல்பட்டு வந்த அனு ராக் நாராயண் சிங், ஆஷா குமாரி, கவ்ரவ் கோகாய், ராம் சந்திர குந்தியா ஆகியோரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர் களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களும் வருமாறு:-

முகுல் வாஸ்னிக் (மத்தியபிரதேசம்), ஹரிஷ் ராவத் (பஞ்சாப்), உம்மன் சாண்டி (ஆந்திரா), தாரிக் அன்வர் (கேரளா, லட்சத்தீவு), பிரியங்கா காந்தி (உத்தரபிரதேசம்), ரன்தீப் சிங் சுர்ஜிவாலா (கர்நாடகம்), ஜிதேந்திர சிங் (அசாம்), அஜய் மக்கான் (ராஜஸ்தான்), கே.சி. வேணுகோபால் (அமைப்பு)

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில பொறுப்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களும் வருமாறு:-

பவன்குமார் பன்சால் (அமைப்பு), ரஜினி பாட்டீல் (ஜம்மு காஷ்மீர்), பி.எல். புனியா (சத்தீஷ்கார்), ஆர்.பி. என்.சிங் (ஜார் கண்ட்), சக்தி சிங் கோஹில் (டெல்லி, பீகார்), ராஜீவ் சங்கர்ராவ் சதவ் (குஜராத்), ராஜீவ் சுக்லா (இமாசலபிரதேசம்), ஜிதின் பிரசாதா (மேற்கு வங்காளம், அந்தமான் நிகோபார்), தினேஷ் குண்டுராவ் (தமிழகம், புதுச்சேரி, கோவா), மாணிக்கம் தாகூர் (தெலுங்கானா), டாக்டர் செல்லகுமார் (ஒடிசா), எச்.கே.பாட்டீல் (மராட்டியம்), தேவேந்தர் யாதவ் (உத்தரகாண்ட்), விவேக் பன்சால் (அரியானா), மணிஷ் சத்ரத் (அருணாசலபிரதேசம், மேகாலயா), பக்தசரண்தாஸ் (மிசோரம், மணிப்பூர்), குல்ஜித் சிங் நக்ரா (சிக்கிம், நாகலாந்து, திரிபுரா)

மாற்றியமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் வருமாறு:-

சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், கே.சி. வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, முகுல் வாஸ்னிக், உம்மன் சாண்டி, அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், ஜிதேந்திரசிங், தாரிக் அன்வர், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, கய்காங்கம், ரகுவீர்சிங் மீனா, தருண் கோகாய்.

காரிய கமிட்டி கூட்டத்துக் கான நிரந்தர அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள்:-

திக் விஜயசிங், மீராகுமார், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், அவினாஷ் பாண்டே, கே.எச்.முனியப்பா, பிரமோத் திவாரி, தாரிக் ஹமீத் கரா, பவன்குமார் பன்சால், ரஜனி பாட்டீல், பி.எல்.புனியா, ஆர்.பி.என்.சிங், சக்திசிங் கோஹில், ராஜீவ் சங்கர்ராவ் சதவ், ராஜீவ் சுக்லா, ஜிதின் பிரசாதா, தினேஷ் குண்டுராவ், மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லகுமார், எச்.கே.பாட்டீல், தேவேந்திரயாதவ், விவேக் பன்சால், மணிஷ் சத்ரத், பக்தசரண்தாஸ், குல்ஜித்சிங் நக்ரா

கீழ்க்கண்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தீபேந்தர் ஹூடா, குல்தீப் பிஷ்னோய், சிந்தாமோகன், சச்சின் ராவ், சுஷ்மிதா தேவ், லால்ஜி தேசாய், சஞ்சீவ ரெட்டி, சச்சின்ராவ், நீரஜ் குந்தன், பி.வி.சீனிவாஸ்

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மதுசூதன் மிஸ்திரி (தலைவர்), ராஜேஷ் மிஷ்ரா, கிருஷ்ண பைரே கவுடா, எஸ்.ஜோதிமணி எம்.பி., அரவிந்தர் சிங் லவ்லி (உறுப்பினர்கள்)

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சி அமைப்பு ரீதியிலிலும், செயல்பாட்டு விவகாரங்களிலும் உதவுவதற்காக 6 பேரை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நியமனங்களை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியில் சோனியா காந்தி அதிரடியாக மாற்றி அமைத்து இருப்பது அரசியல் அரங்கில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story