இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் : தமிழகத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கம்


இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள்  : தமிழகத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 12 Sept 2020 7:32 AM IST (Updated: 12 Sept 2020 7:32 AM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன். தமிழகத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கப்படுகிறது.


புதுடெல்லி

மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்குத் தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

சென்னை சென்ட்ரல் - டெல்லி, சென்னை சென்ட்ரல் - சாப்ரா இடையே இருமார்க்கத்திலும் இன்று முதல் ரெயில்கள் இயக்கப்படும். வரும் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா  இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் திரும்பிவருவதற்காக சிறப்பு ரெயில்கள் விடப்படுவதாகவும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் கூடுதல் ரெயில்களை இயக்க தயார் என்றும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story