அருணாசலபிரதேசத்தில் இருந்து மாயமான 5 இளைஞர்களை ஒப்படைத்தது சீன ராணுவம்


அருணாசலபிரதேசத்தில் இருந்து மாயமான 5 இளைஞர்களை ஒப்படைத்தது சீன ராணுவம்
x
தினத்தந்தி 12 Sept 2020 3:38 PM IST (Updated: 12 Sept 2020 3:38 PM IST)
t-max-icont-min-icon

அருணாச்சல பிரதேசத்தில் இருந்து மாயமான 5 இந்தியர்களை ராணுவத்திடம் சீனா ஒப்படைத்தது.

புதுடெல்லி,

அருணாச்சலபிரதேச மாநிலம் அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டம், நாச்சோ கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை சீன ராணுவம் அத்துமீறி, கடத்தி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் இந்த 5 பேரை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என சீனா தரப்பில் ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதேசமயம் அருணாசலபிரதேசத்தில் இருந்து மாயமான 5 பேர் தங்கள் மண்ணில் தான் உள்ளனர் என்று சீனா ராணுவம் தெரிவித்ததாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ கூறினார். மேலும் அவர்களை நமது அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சீனா ராணுவம் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அருணாசலபிரதேசத்தில் இருந்து மாயமான 5 பேர் இன்று நமது அதிகாரிகளிடம் சீன ராணுவம் ஒப்படைத்துள்ளது. அவர்கள் கிபிது எல்லை சோதனை சாவடி வழியாக அருணாச்சல பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


Next Story