நீட் தேர்வு: மாணவர்களுக்கு தங்குமிடம், இலவச பஸ் போக்குவரத்து வசதி - ஒடிசா அரசு ஏற்பாடு


நீட் தேர்வு: மாணவர்களுக்கு தங்குமிடம், இலவச பஸ் போக்குவரத்து வசதி - ஒடிசா அரசு ஏற்பாடு
x
தினத்தந்தி 12 Sept 2020 5:26 PM IST (Updated: 12 Sept 2020 5:26 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ளது.

புவனேஸ்வர்,

மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 459 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 83 நீட் தேர்வு மையங்களுக்கு இலவசப் போக்குவரத்து மற்றும் மாணவர்களுக்கு தங்குவதற்கான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர், கட்டாக்,சாம்பல்பூர் உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு கடற்கரை ரெயில்வே சார்பில் நீட் தேர்விற்காக சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story