காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு பயணம்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வழக்கம்போல் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் வெளிநாட்டில் 2 வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார். அதன்பின்னர் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்.
சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணத்தில் அவருடன் அவரது மகன் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.யான ராகுல் காந்தி சென்றுள்ளார். அவரும் நாடு திரும்பிய பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story