ஆந்திராவில் என்.டி.ராமராவ் சிலை உடைப்பு


ஆந்திராவில் என்.டி.ராமராவ் சிலை உடைப்பு
x
தினத்தந்தி 13 Sept 2020 2:28 AM IST (Updated: 13 Sept 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் என்.டி.ராமராவ் சிலை உடைக்கப்பட்டு உள்ளது.

விஜயவாடா,

ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொலாவரம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமராவின் சிலை இருந்தது. இந்த சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. என்.டி.ராமராவின் சிலை உடைக்கப்பட்டதற்கு தெலுங்குதேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story