முழு உடல் பரிசோதனைக்காக அமித்ஷா அனுமதி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை


முழு உடல் பரிசோதனைக்காக அமித்ஷா அனுமதி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை
x
தினத்தந்தி 13 Sept 2020 2:28 PM IST (Updated: 13 Sept 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 47 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அதே போல, 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைகின்றனர்.

அந்தவகையில், கடந்த 2ம் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தார். அதனை அடுத்து, டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற அவர், பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

அதனை அடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். உடல் சோர்வு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பின்னர் குணமடைந்த அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், இன்று மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story