கங்கனாவை ஆதரிப்பது துரதிஷ்டவசமானது - பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்


கங்கனாவை ஆதரிப்பது துரதிஷ்டவசமானது - பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்
x
தினத்தந்தி 13 Sept 2020 10:17 PM IST (Updated: 13 Sept 2020 10:17 PM IST)
t-max-icont-min-icon

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு பா.ஜ.க ஆதரவளிப்பது துரதிஷ்டவசமானது என சிவசேனா கூறியிருக்கிறது.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார். இதையடுத்து அவருக்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகையின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி அதை இடித்து தள்ளியது. இதனால் மோதல் மேலும் முற்றியது.

இந்த நிலையில், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு பா.ஜ.க  ஆதரவளிப்பது துரதிஷ்டவசமானது என சிவசேனா கூறியிருக்கிறது. சிவசேனா கட்சி பத்திரிகையில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில் கங்கனாவுக்கு ஆதரவளிப்பது மற்றும் சுஷாந்த் சிங் வழக்கில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டினால், பா.ஜ.க பீகார் தேர்தலில் வெற்றிபெற உயர் வகுப்பினரை குறிவைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 


Next Story