அடுத்த ஆண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
வரும் 2021-ம் ஆண்டு முதல் காலாண்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:- “ கொரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தேதி நிர்ணயிக்கப்படவில்லை. 2021 முதல் காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் சாத்தியம் உள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, உற்பத்தி காலம் உள்ளிட்டவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகளவு இருக்கக் கூடிய அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்காக தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்படுவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஒருமித்த முடிவு எட்டிய பிறகே, இது நடைமுறைப்படுத்தப்படும். தடுப்பூசி மீது யாருக்கேனும் நம்பிக்கையின்மை இருந்தால், முதல் நபராக நானே மகிழ்ச்சியுடன் செலுத்திக்கொள்வேன்.
பரிசோதனையில் மட்டுமே தடுப்பு மருந்துகள் இருப்பதால், அவற்றின் விலை பற்றி தற்போதே கூறுவது முதிர்ச்சியற்றதாக இருக்கும். எனினும், விலையை பொருட்படுத்தாமல் தடுப்பூசி யாருக்கு தேவைப்படுமோ அவர்களுக்கு நிச்சயம் கிடைக்க அரசுவகை செய்யும்” என்றார்.
Related Tags :
Next Story