டெல்லியில் ஜிம், யோகா மையங்களுக்கு அரசு அனுமதி
டெல்லியில் ஜிம்கள் மற்றும் யோகா மையங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் ஊரடங்கில் முடங்கிய மக்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் ஆறுதலளித்து உள்ளன. எனினும், பொதுமக்கள் அனைவரும் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.
சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றி வருகின்றனர். ஊரடங்கின் தளர்வுகள் அறிவிப்பில் சில விசயங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஜிம்கள் மற்றும் யோகா மையங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர்த்து பிற இடங்களில், வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றி ஜிம்கள் மற்றும் யோகா மையங்கள் செயல்படுவதற்கு உடனடியாக அனுமதி கிடைத்துள்ளது.
இதேபோன்று கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர்த்து பிற பகுதிகளில், இந்த மாதம் 14ந்தேதி முதல் 30ந்தேதி வரை டெல்லியின் 3 மாநகராட்சிகளிலும் ஒரு மண்டலத்திற்கு ஒரு நாள் என்ற விகிதத்தில் வார சந்தை ஒன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story