மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி, எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி, பரிசோதனை செய்து கொண்ட எம்.பி.க்களில் மேற்கு வங்காள மாநிலம் பலுர்காட் தொகுதி பா.ஜனதா எம்.பி. சுகந்த மஜும்தாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக, அதே மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் லாக்கட் சாட்டர்ஜி, ஜெயந்த ராய் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது.
Related Tags :
Next Story