மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி


மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 14 Sep 2020 12:35 AM GMT (Updated: 14 Sep 2020 12:35 AM GMT)

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா (வயது 55). கடந்த மாதம் 2-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனே டெல்லியை அடுத்த குர்கான் மேதாந்தா ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் 14-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு, உடல் வலி ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கடந்த 18-ந் தேதி சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து 31-ந் தேதி அங்கிருந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இதையொட்டி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது வழங்கப்பட்ட ஆலோசனையின்படி, அவர் (அமித் ஷா) இப்போது நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன்னதாக, ஒன்றிரண்டு நாட்கள் முழுமையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள் ளார்” என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story