தடுப்பூசி நம்பிக்கையின்மை:தானே முதலில் போட்டுக் கொள்ளத் தயார் - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன்


தடுப்பூசி நம்பிக்கையின்மை:தானே முதலில் போட்டுக் கொள்ளத் தயார் - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன்
x
தினத்தந்தி 14 Sep 2020 12:56 AM GMT (Updated: 14 Sep 2020 12:56 AM GMT)

தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால், அதை போக்க, தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார். என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும். தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால், அதை போக்க, தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார்.தடுப்பூசி தயாரானதும் முன்கள கொரோனா பணியாளர்கள், மூத்த குடிமக்கள், வேறுபல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அது போடப்படும்.

பொருளாதார வசதியை பொருட்படுத்தாமல், யாருக்கு முதலில் தேவையோ அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றார் அவர். தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, அவசரத் தேவை, தயாரிப்புக்கான காலம் உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆலோசனை நடந்து வருகிறது எனகூறினார்.


Next Story