இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது - மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா


இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது - மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா
x
தினத்தந்தி 14 Sept 2020 12:34 PM IST (Updated: 14 Sept 2020 12:34 PM IST)
t-max-icont-min-icon

இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா வெளியிட்டுள்ளா வீடியோவில் கூறியிருப்பதாவது:-

இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. நம் நாட்டில் சுதந்திர போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்ட இந்தி சக்தி வாய்ந்ததாக பயன்பட்டு வருகிறது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேறு எந்த மொழிகளுடனும் இந்தி போட்டியிடவில்லை. மொழி மற்றும் புவியியல் எல்லைக்கோட்டினால் தான் ஒரு நாடு அடையாளம் காணப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் அதன் மொழிகள் தான் பலம். அது நம் ஒற்றுமையில் ஒரு அடையாளம் ஆகும். மொழி, கலாச்சாரம் என இந்திய நாடு வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைகின்ற மொழியாக இந்தி மொழி இருக்கிறது.

இவ்வாறு அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

Next Story