பிறந்தநாளை முன்னிட்டு புலியை தத்தெடுத்த 12 வயது சிறுவன்!


பிறந்தநாளை முன்னிட்டு புலியை தத்தெடுத்த 12 வயது சிறுவன்!
x
தினத்தந்தி 14 Sept 2020 5:36 PM IST (Updated: 14 Sept 2020 5:36 PM IST)
t-max-icont-min-icon

தனது பிறந்தநாளை முன்னிட்டு 12 வயது சிறுவன் ஐதரபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் ஒரு வங்கப்புலியை தத்தெடுத்துள்ளார்.

ஐதரபாத்,

தனது பிறந்தநாளை முன்னிட்டு 7-ம் வகுப்பு படிக்கும் சின்மய் சித்தார்த் ஷா ( வயது 12 ) என்ற சிறுவன்   ஐதரபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் ஒரு வங்கப்புலியை தத்தெடுத்துள்ளான்.

சங்கல்ப் எனப் பெயர்கொண்ட புலியை 3 மாதத்திற்கு தத்தெடுத்து, ரூ25 ஆயிரம் காசோலையை வழங்கி உள்ளதாக பூங்கா ஏ.என்.ஐக்கு கொடுத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் சின்மய் தவிர, ஹர்விஷா ஜெய்ன், விஹான் அதுல் ஜெய்ன் என்ற மற்ற இரண்டு மாணவர்களும் இரவுநேர விலங்குகளைத் தத்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ப்ரெக்க்ஷா, பிரியல் மற்றும் பக்தி நாக்டா என்ற 3 பெண்களும் சில பறவைகளைத் தத்தெடுத்து ஒவ்வொன்றுக்கும் ரூ.5 ஆயிரம் காசோலையை வழங்கியதாக பூங்காவின் டெப்யூட்டி க்யுரேட்டர் நாகமணி கூறியுள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு,மற்றவர்களும் விலங்குகள் மற்றும் பறவைகளைத் தத்தெடுக முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விலங்குகள் மற்றும் பறவைகளைத் தத்தெடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் கூறியுள்ளார்.

Next Story