மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் தேர்வு


மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் தேர்வு
x
தினத்தந்தி 14 Sept 2020 5:50 PM IST (Updated: 14 Sept 2020 5:50 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஸ் தேர்வு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக, ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஷா போட்டியிட்டார்.

வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகு மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் வெற்றி பெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.  தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

ஹரிவன்ஸ் சபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். நான் அவரை வாழ்த்துகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. யும் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநிலங்களவை எம்.பிக்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ பதவியேற்றுக்கொண்டனர். திமுக எம்.பி.க்கள் மூவருக்கும் மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Next Story