மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா


மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Sept 2020 2:09 AM IST (Updated: 15 Sept 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

மேகாலயா கவர்னர் மாளிகையில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஷில்லாங்,

மேகாலயா மாநில கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கவர்னர் சத்யபால் மாலிக் தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் கவர்னர் உள்பட மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மேலும் 11 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மேகாலயா கவர்னர் மாளிகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து உள்ளது. கவர்னர் சத்யாபால் மாலிக்கிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Next Story